Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முறியடிக்கப்படும் சாதனைகள்: இது விராட் கோஹ்லியின் ஸ்டைல்

In கிாிக்கட்
Updated: 10:55 GMT, Oct 29, 2017 | Published: 10:55 GMT, Oct 29, 2017 |
0 Comments
2324
This post was written by : Anojkiyan

அணித்தலைவராக ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 91 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, 1437 ஓட்டங்கள் பெற்று ஒரு ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங் 1424 ஓட்டங்களை பெற்றிருந்தமையே ஒரு ஆண்டில் அணித்தலைவர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. அதனை தற்போது கோஹ்லி முறியடித்துள்ளார்.

இந்த வரிசையில் 1373 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்கும், 1268 ஓட்டங்களுடன் இந்தியாவின் அசாரூதினும், 1244 ஓட்டங்களுடன் இலங்கையின் ஏஞ்சலே மெத்தியூஸூம் உள்ளனர்.

இதேவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ஓட்டங்களை பெற்ற வீரர் ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் 194 இன்னிங்ஸில் இந்த ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg