Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-காஷ்மீரில் தொடர் மோதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

In இந்தியா
Published: 11:13 GMT, Oct 29, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Kemasiya
10-indain-armys-6003

ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில்,  ஜாகீர் அப்பாஸ் என்னும் பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில்,  ஸ்ரீநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பந்திப்போரா மாவட்டம் ஹஜின் அருகே உள்ள,  மிர் மொஹாலா என்ற கிராமத்தில்,  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து,  அப் பகுதியை சுற்றிவளைத்த படையினர் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதன் பின்னர் படையினர் சுற்றிவளைப்பினை அதிகப்படுத்தும் போது,  அங்குள்ள ஒரு பகுதியினர் பாதுகாப்பு படையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் சுற்றிவளைப்பை நிறுத்திய படையினர்,  கூடுதல் படையினர் மற்றும் பொலிஸாரை வரவழைத்து மீண்டும் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது,  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போதே மேற்படி பொலிஸார் பாதிக்கப்பட்டுள்னர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg