Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைகளை பறிக்கும் அரசியல் யாப்பை உருவாக்க மாட்டோம்: ஹட்டனில் தெரிவித்தார் ரணில்

In இலங்கை
Published: 11:28 GMT, Oct 29, 2017 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan

நாட்டை பிரிக்கும் அல்லது மக்களின் மொழி உரிமை, மத உரிமை பாதிக்கும் வகையில் அரசியலைமைப்பை உருவாக்கிவிடகூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். அதேவேளை மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக அரசியல் யாப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணி உறுதிப் பத்திரங்கள் ஹற்றனில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னால் அமைச்சர் ஜீல் பீரிஸ், திஸ்ஸ வித்தான போன்றோர் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மஹிந்தவின் ஆட்சி காலப்பகுதியில் 13ஆம் திருத்த சட்டத்திற்கு அப்பால் அரசியலமைப்பை சீர் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வாக்குகளுக்கு மதிப்பளித்து, மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. அன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாட்டு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம். புதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அனைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர். இந்த உயர்வான நிலையை நாம் வரவேற்கின்றோம்.

பல வெளிநாடுகள் தமது நாடுகளை பிரித்தும், விலகியும் செல்ல முற்படுகின்றன. ஆனால் இலங்கையில் 2015ஆம் ஆண்டு நாட்டில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள், மூஸ்லீம்கள், பேகர் போன்றோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கி நல்ல சமிக்கையை அளித்துள்ளனர்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1986ஆம் ஆண்டு முதல் மலையக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. ஆனால் இவர்களுக்கு இடமோ, வீடோ அப்போது இருக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் பிரஜைகளாகிய இவர்கள் இன்று தமக்கென வீடுகளும், காணிகளும் சொந்தமாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் சகல உரிமைகளும் இவர்களுக்கு கிடைத்திருக்கும் வேளையில் மேலும் இவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது நோக்கமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg