Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுல்காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்: அமைச்சரின் வலியுறுத்தல்

In இந்தியா
Updated: 11:37 GMT, Oct 29, 2017 | Published: 11:37 GMT, Oct 29, 2017 |
0 Comments
1379
This post was written by : Kemasiya

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என, மத்திய அமைச்சரும் குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் அகோலாவில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராகுல் காந்திக்கு 47 வயதாகிவிட்டது. நாளுக்கு நாள் முதிர்ச்சியடைந்து வருகின்றார்.  இந் நிலையில் அவர் மகாத்மா காந்தியின் இடத்தை நிரப்ப வேண்டும்.

தற்பொழுது ராகுல்காந்தி தலித் வீடுகளுக்கு செல்கின்றார். அங்கு அவர்களுடன் உணவருந்துகின்றார். அதே போன்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்து, சாதி மதம் அற்ற சமத்துவத்தை  ஏற்படுத்த வேண்டும்” என அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg