Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்படுகிறது: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Updated: 12:30 GMT, Oct 29, 2017 | Published: 12:18 GMT, Oct 29, 2017 |
0 Comments
1159
This post was written by : Anojkiyan
150 years Canada

மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றதன் பின்பும் அதற்கு முன்பும் அவர்களது ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஊழியர் சேமலாப நிதி போன்றவற்றை பெற்று தருவதாககூறி பல தரகர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் பிராந்திய கிளை காரியாலம் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தொழிலாளர்களின் அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தி இவர்களை ஏமாற்றி பெருந்தொகையான பணத்தை தரகர்கள் பெற்றுக் கொள்ளும் அதேநேரம் சிலருக்கு இவர்களால்  ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பன கிடைக்காத சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மலையத்தில் நுவரெலியாவில் குறித்த நிதியங்களின் பிராந்திய கிளை காரியாலயம் திறந்து வைத்து இருப்பது நல்ல காரியம். அதே வேலை இதனை பெற்று தருவதாக கூறி தற்போது மலையகத்தில் செயற்பட்டு வரும் தரகர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg