Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இரத்ததான முகாம்!

In இலங்கை
Updated: 12:32 GMT, Oct 29, 2017 | Published: 12:32 GMT, Oct 29, 2017 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் சிறைச்சாலையில் இரத்ததான முகாமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

‘உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்துகொள்’ எனும் தொனிப்பொருளில் குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கேஎம்.யு, எச். அக்பர் தலைமையில் நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்க உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவு வைத்தியர் மனோ கிரிசாந்தன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg