Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனிய சுதந்திர சார்புக் கட்சிகள் பெரும்பான்மையை இழக்கும் சாத்தியம்

In
Updated: 12:27 GMT, Oct 29, 2017 | Published: 12:26 GMT, Oct 29, 2017 |
0 Comments
1174
This post was written by : Suganthini
spain

கதலோனியாவில் எதிர்வரும் டிசெம்பரில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் கதலோனிய சுதந்திர சார்புக் கட்சிகள், நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கதலோனியாவில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில், கதலோனிய சுதந்திரம் சார்புக் கட்சிகள் பெரும்பான்மையை இழக்கும் சாத்தியம் உள்ளது.

இருப்பினும், இந்தத் தேர்தலின்போது கடுமையான போட்டி நிலவும் என்பதுடன், இதில் வெற்றியீட்டுவதற்காக இரு தரப்பினர்களும் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

இந்நிலையில், ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்போது, கதலோனிய சுதந்திரம் சார்புக் கட்சிகள் ஆதரவாக 42.5 சதவீதமான வாக்குகளையும் கதலோனிய சுதந்திரம் எதிர்ப்புக் கட்சிகள் 43.4 சதவீதமான வாக்குகளையும் பெற்றுள்ளன’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg