Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையை தேயிலை உற்பத்தியில் உலகிற்கு அடையாளப்படுத்தியவர்கள் தோட்ட தொழிலாளர்கள்: கயந்த

In இலங்கை
Updated: 13:14 GMT, Oct 29, 2017 | Published: 13:10 GMT, Oct 29, 2017 |
0 Comments
1223
This post was written by : Anojkiyan
150 years Canada

இலங்கையை தேயிலை உற்பத்தியில் உலகிற்கு அடையாளப்படுத்தியவர்கள் மலையக தோட்ட தொழிலாளர்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பெயர் விளங்கும் வகையில் சிலோன் டி யை உலக சந்தைக்கு அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்கள். இவர்களின் 150 வருட கால வாழ்க்கை முறையில் 5 பரம்பரைகளை கொண்ட இவர்கள், வீடு மற்றும் காணி உரிமைகள் ஏதும் இன்றி இருந்த நிலையில், இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் தனி வீடுகளும் காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டதன் ஊடாக நிரூபனமாகியுள்ளது.

இளம் அமைச்சரான திகாம்பரம்இம்மக்களின் வாழ்வதாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து ஏனைய சமூகத்துடன் சரிக்கு நிகராக இம்மக்களை வாழவைக்கும் இலக்கினை கொண்டவர். பரம்பரையாக தேயிலை மண்ணுக்கு தமது வியர்வைகளை சிந்தி மாய்ந்து உரமாகவும் ஆக்கப்பட்ட இம்மக்களுடைய வாழ்க்கை முறையில் புதிய மொழியை ஏற்றுவதற்கு நாட்டின் தலைவரான ஜனாதிபதி மற்றும் பிரதமர் நல்லாட்சி அரசாங்கத்துடன் வித்திட்டுள்ளனர்.

தனக்கு ஒரு நிலம் இல்லை. வீடு இல்லை என வேதனையுடன் தேயிலை செடிக்குள் மத்தியில் வாழ்ந்த மலையகத்தின் மூதாதையர்கள் கண்ட கனவு இன்று பழித்துள்ளது. அவர்களில் உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்கள் இந்த வேளையில் சந்தோஷமடைவர். கொக்கோ, கோப்பி, தேயிலை என விவசாய உற்பத்திகளை மேற்கொண்ட இவர்களுள் தேயிலை உற்பத்தி உலகளாவிய ரீதியில் முதல் இடத்தை வைக்கும் நிலையினை நாட்டுக்கு உருவாக்கி கொடுத்துள்ளனர்.

தொழிலாளர்களின் பிள்ளைகளின் தேயிலை தொழிலில் ஈடுப்படுவதைவிடுத்து வைத்தியர்கள், பொறியலாளர்கள், சட்டதரணிகள் என உயர் தொழிலை பெற்று எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவதுடன் எமது அரசாங்கமும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தனி வீடும், வீட்டுக்கான நில உரிமையும் இன்று பெற்றதன் ஊடாக இந்த நாட்டின் உண்மையான பிரஜா உரிமை பெற்ற மக்களாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையை வைத்தும் நில உரிமையும் வைத்தும் பல்வேறு அரச தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும். வங்கி கடன் பாடசாலைகளுக்கான உறுதி மாடிக்கு மேல் மாடி வீடு என பல வசதிகளையும் இவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg