Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டம் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாததே இனவாதத்திற்கு காரணம்: கமலதாஸ

In இலங்கை
Updated: 13:25 GMT, Oct 29, 2017 | Published: 13:25 GMT, Oct 29, 2017 |
0 Comments
1217
This post was written by : Anojkiyan

சட்டம் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாததே இனவாதம் உருவாவதற்கு காரணம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் ஸ்திரத் தன்மை சீர்குலைவு குறித்தும் இன வாத செயற்பாடுகள் குறித்தும அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இனவாதத் தீ இன்னமும் நீறு பூத்த நெருப்பாக உள்ளே பொருமிக் கொண்டிருக்கின்றது. குழப்பகரமான நிலை நீடிக்கிறது. காணிப் பிரச்சினை, புதிய உள்ளுராட்சி மன்ற யோசனைகள் அடங்கிய எல்லைகள், வர்த்தகக் நிறுவனங்களின் ஆதிக்கம், அரசாங்க அதிகாரிகளின் ஊழல் மோசடிகள், புதிய அரசியலில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி பிரதேச அரசியல்வாதிகள் எவரும் முன்னிலைப்படுத்தவில்லை.

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு விதிகளே இனங்களுக்கிடையில் சுமுக சூழ்நிலையையும் சகவாழ்வையும் ஏற்படுத்தப் போதுமானது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால்தான் இத்தனை குழப்பங்களும் உருவாகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான விரும்பத் தகாத வெறுப்புணர்வை பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த விதம் இந்த மாவட்டத்தில் இன முறுகலை ஏற்படுத்த எங்கிருந்தோ மறைமுக சக்திகள் கங்கணம்கட்டி நிற்பதைப் புலப்படுத்துகின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg