Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறுமைக்குட்பட்ட 15 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

In இலங்கை
Updated: 13:39 GMT, Oct 29, 2017 | Published: 13:39 GMT, Oct 29, 2017 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக்குட்பட்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் பிள்ளைகளின் போக்குவரத்து நலன் கருதியும் அக்குடும்பத்தில் வாழ்வாதார நோக்கத்திற்கான தேவை கருதியும் சுமார் 15 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மகளிரை வலுவூட்டும் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை), செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பதில் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், சொண்டா கிளப் ஐஐஐ கொழும்பு கிளையின் செயலாளர் பரீதா லுக்மான்ஜீ, கிவ் ரு லங்கா நிறுவனத்தின் தவிசாளர் டுலான் டி சில்வா, பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, திட்ட முகாமையாளர் அருள் சக்தி பல அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகளான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg