Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் முதன்முறையாக கண்கவர் ‘கட்டன பெரஹர’ ஊர்வலம்!

In இலங்கை
Updated: 13:56 GMT, Oct 29, 2017 | Published: 13:56 GMT, Oct 29, 2017 |
0 Comments
1352
This post was written by : Anojkiyan

ஏறாவூர் நகரில் முதன் முறையாக ‘கட்டன பெரஹரா’ ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

ஏறாவூர் புலினதலாராமய விகாரையிலிருந்து ஏறாவூர் பொலிஸ் நிலைய மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வரை பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகளுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

தம்பிட்டிய விஹாராதிபதி ஞானானந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற இவ்வூர்வலத்தில் தம்பிட்டி, மஹாஓணா, மற்றும் ஏறாவூர் பிரதேச சிங்கள தமிழ் மக்கள், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், மஹாஓயா வித்தியாலய சிங்கள மாணவர்கள், உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இதேவேளை வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தம்பிட்டிய பகுதி சிங்கள மாணவர்கள் மற்றும் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சுமார் 400 பேருக்கு பாடசாலைக் கற்றல் உபகரணங்களும் ஏறாவூரைச் சேர்ந்த 35 கர்ப்பிணித் தாய்மாருக்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

150 years Canada

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg