Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டமானின் பெயரில் குடும்ப அமைப்பு: அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்கிறார் திகா

In இலங்கை
Published: 14:07 GMT, Oct 29, 2017 |
0 Comments
1420
This post was written by : Anojkiyan

மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு வகையில் ஊழல் மோசடிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவிடம் முறையிட்டு தொடர்புடையவர்களை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தோட்டத் தொழிலாளியின் பிள்ளை ஒருவன் மலையகத்தில் அதிகாரத்திற்கு வந்நதால் மாத்திரமே மலையகத்தை அபிவிருத்தியடைய வைக்க முடியும். அது இப்போது நிறைவேற்றப்படுகின்றது. மலையகத்தின் மாபெரும் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற பெரியவரின் பெயரை வைத்துக் கொண்டு ஊழல் செய்து வருகின்றனர். நான் ஊழல் அற்ற அமைச்சர் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

தேர்தல் காலம் நெருங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில் எனக்கு எதிராக பல விரோத செயல்பாடுகளை பலர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு கிடைத்த தாத்தாவை போல் எனக்கு கிடைத்திருந்தால் அந்த கட்சியை எங்கோ கொண்டு போயிருப்பேன்.

அரசுக்கு சொந்தமான அமைப்புகளை வழிநடத்தும் இவர்கள் அதன் கணக்கு வழக்குகளை அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆகவே இவர்களுக்கு எதிராக நான் ஊழல் மோசடி விசாரணைக்கு தகவல் வழங்கி நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்களுக்கு நான் ஒருகாலமும் துரோகம் இழைக்க மாட்டேன். இவர்களுக்கு துரோகம் நினைப்பவர்களை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg