Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தின் அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கே பாரிய பங்கு: இராதாகிருஷ்ணன்

In இலங்கை
Published: 15:13 GMT, Oct 29, 2017 |
0 Comments
1235
This post was written by : Anojkiyan

மலையக வரலாற்றை திருப்பி பாரத்தால், மலையகத்தின் அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சியே பாரியளவில் செயல்பட்டு உள்ளது என மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மலையகத்தில் கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, உட்கட்டமைப்பு, அபிவிருத்தி பணிகளை விரைந்து முன்னெடுப்பதற்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றது. இக்காலப்பகுதியில் விரைவாக செயல்பட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழர்களுக்கு இந்து கலாச்சார அமைச்சு என்ற ஒன்றை ஆரம்பித்தது கூட ஐக்கிய தேசிய கட்சி தான் ஆரம்பத்தில் அமைச்சராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராஜதுரை என்பவரும், பிறகு பி.பி.தேவராஜ் என இன்றும் ஒரு தமிழ் அமைச்சர் ஊடாக இந்த கலாச்சார அமைச்சு செயல்படுகின்றது.

25 பாடசாலைகள் நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளையில் தோட்ட பாடசாலைகள் அபிவிருத்திக்கென 450 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் கூற்றுக்கு அமைவாக மலையகத்தில் கல்வி அபிவிருத்தி அடைந்தால் மாத்திரமே பெருந்தோட்டதுறை சமூகம் வளர்ச்சி பெறும் இதற்கென கணித, விஞ்ஞான துறையில் பெருந்தோட்ட மாணவர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்பது தொடர்பில் அடிக்கடி கூறுவார். இதனை நிறைவேற்றம் செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய அரசாங்கத்துடனும் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் இதற்கான உறுதிப்பத்திரங்களை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தருணத்தில் அமரரும் சந்திரசேகரன் அமைச்சராக இருந்தபொழுது தனி வீடுகள் அமைத்து காணி உறுதி பத்திரங்களையும், வழங்கி வந்தமையை ஞாபகப்படுத்த வேண்டும்.

மலையக மக்களுக்கு குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கூறப்பட்டு கிளங்கன் வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு தாதிகள் வைத்தியர்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் வேளையில் கிளங்கன் வைத்தியசாலைக்கு 180 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg