Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு ஆறுதல் வெற்றியையும் வழங்க மறுத்தது பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 04:09 GMT, Oct 30, 2017 | Published: 04:09 GMT, Oct 30, 2017 |
0 Comments
1464
This post was written by : Risha

இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரின் வெற்றியை ஏற்கனவே உறுதிபடுத்தியிருந்த நிலையில், லாகூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெறும் 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதன்படி பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரை 3-0 என கைப்பற்றி இலங்கை அணியை வைட்-வொஷ் செய்தது. பாகிஸ்தானின் சோயிப் மாலிக் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg