Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குர்திஸ் தலைவர் பர்சானி பதவி விலகவுள்ளார்!

In உலகம்
Updated: 04:31 GMT, Oct 30, 2017 | Published: 04:31 GMT, Oct 30, 2017 |
0 Comments
1295
This post was written by : Suganthini

சுதந்திரம் தொடர்பாக குர்திஸ்தானுக்கும் ஈராக்கும் இடையில் சர்ச்சை நிலவிரும் நிலையில், குர்திஸ்தான் தலைவர் மசூத் பர்சானி பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.

இவரது பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், தான் பதவி நீடிப்புக் கோரப் போவதில்லை என, குர்திஸ்தான் தலைவர் மசூத் பர்சானி தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்துசெல்வதற்கு ஆதரவாகக் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், இதற்கு ஆதரவாக 92 சதவீதமானோர் வாக்களித்தனர். ஆனால், இந்த வாக்கெடுப்புச் சட்டவிரோதமானது என்று ஈராக் மத்திய அரசாங்கம் தெரிவித்தது.

இதன் பின்னர், குர்துக்கள் வசமிருந்து கிர்குக் நகர் மீது படை எடுத்த ஈராக் ராணுவத்தினர், இப்பகுதியின் வளமிக்க எண்ணெய் வயல்களை கைப்பற்றினர்.

71 வயதான பர்சானியின் கனவான குர்திஸ்தான் சுதந்திரத்துக்கு இப்பிராந்திய மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தபோதிலும், பர்சானியின் கனவு சுக்குநூறாகிவிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற பர்சானி, தன்னாட்சி குர்திஸ்தான் அமைய முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg