Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினி-கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகவில்லை: வைகோ!

In இந்தியா
Published: 05:25 GMT, Oct 30, 2017 |
0 Comments
1233
This post was written by : Kemasiya
vaiko

நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது தொடர்பில் இதுவரை தெளிவாக  அறிவிக்கவில்லை என, ம.தி.மு.க பொதுச் செயலாளர்  வைகோ   தெரிவித்துள்ளார்.

மதுரையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“அரசியலுக்கு வருது, கட்சியை தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமைகள், ஜனநாயகத்தில் அனைவரும் உள்ளது. எனவே அவர்கள் அரசியலுக்கு வரலாம். அந்த உரிமை அவர்களுக்குள்ளது.

பொதுமக்களின் நலன் மற்றும் நாட்டின் நலனை பாதுகாக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே அக்கறை உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம்” என வைகோ தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg