Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.O திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட குட்டி சுப்பர் ஸ்டார்கள்!

In சினிமா
Updated: 05:23 GMT, Oct 30, 2017 | Published: 05:07 GMT, Oct 30, 2017 |
0 Comments
1712
icon_com
This post was written by : Surenth
Rajinikanth-Special-Moments-with-Grandsons-Yatra-Linga

2.O திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இரண்டு குட்டி விருந்தாளிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். சுபாஸ்கரன் பெருமையுடன் வழங்கும் லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு விழா கடந்த வாரம் துபாயில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியின் மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோர் பாட்டனார் ரஜினிகாந்த் அருகில் வந்து மேடையில் நின்றனர். அவர்கள் ரஜினியின் மீது கைபோட்டு கொஞ்சிப் பேசிய காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இவ்வாறு கொஞ்சிப் பேசுகின்ற ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றன.

இதேவேளை, 2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்த ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg