Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 05:19 GMT, Oct 30, 2017 | Published: 05:19 GMT, Oct 30, 2017 |
0 Comments
1522
This post was written by : Suganthini

வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி திடீரென்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி தாக்கியுள்ளதுடன், அந்நாடுகளில்  சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில், போலாந்தில் மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் பலத்த காற்று வீசியுள்ளதைத் தொடர்ந்து பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் அதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், ஜேர்மனியின் மத்திய பகுதியில் கடும் மழை பெய்துவரும் நிலையில் அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சில பகுதிகளில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக  போலாந்து மற்றும் செக் குடியரசின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg