Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் தீர்ப்பிலிருந்து கமல்ஹாசன் நல்ல பாடம் கற்பார்: உதயகுமார்!

In இந்தியா
Published: 05:43 GMT, Oct 30, 2017 |
0 Comments
1302
This post was written by : Kemasiya
vgfgfygf

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் வழங்கும் தீர்ப்பின் மூலம் சிறந்த பாடத்தை கற்றுக்கொள்வார் என, தமிழக அமைச்சர் ஆ.பீ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“யார் வேண்டும் எனினும் மக்கள் சேவை ஆற்றலாம். ஆனால் அவர்கள் செய்யும் சேவை, மக்களால் ஏற்கப்படுகின்றதா என்பதே விடயம்.தமிழக தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. முதலமைச்சர் யாருக்கும் தடை போடவில்லை.

எனவே கமலஹாசன், ஒரு ஆசையில் முயற்சி எடுத்துள்ளார். அதற்கான தீர்ப்பு மக்கள் கைகளில் தான் உள்ளது. அவர்களின் தீர்ப்பின் மூலம் சிறந்ததொரு பாடத்தை கற்றுக்கொள்வார் என, ஆ.பீ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg