Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தினத்தில் ஸ்ரீதரன் எம்.பி. சுடரேற்றியது ஏன்? – விளக்குகிறாா் பசுபதிபிள்ளை

In இலங்கை
Updated: 05:39 GMT, Oct 30, 2017 | Published: 05:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1412
This post was written by : Varshini

வடக்கு மக்களின் அதிக ஆதரவை பெற்றவர் என்ற ரீதியிலும், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்தவர் என்ற ரீதியிலுமே, கடந்த வருட மாவீரர் தினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுடரேற்றினார். மாறாக எவ்வித அரசியல் அரங்கேற்றமும் அங்கு இடம்பெறவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை விளக்கமளித்துள்ளார்.

அடுத்த மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள தமிழ் தேசிய மாவீரர் நாள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு மாவீரர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், கடந்த வருடம் அவர்கள் ஏன் மாவீரர் தினத்தில் சுடரேற்றினர் என்றும், இவ்வருடமும் மாவீரர் தினத்தன்று அரசியல் அரங்கேற்றப்படுமா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் போதே, பசுபதிப்பிள்ளை மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, அடுத்த வருட மாவீரர் தினத்தன்று தான் உயிரோடு இருப்பேனோ என்று தெரியாதென்றும், ஆகவே இவ்வருடம் சுடரேற்ற அனுமதி பெற்றுத் தாருங்கள் எனவும் மாவீரர் ஒருவருடைய தாயார் சிறிதரன் எம்.பி.யிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் மறுப்பு தெரிவிக்காததையடுத்து, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவாக்கப்பட்டு, அன்றைய தினம் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறிதரன் பொதுச்சுடர் ஏற்றியுள்ளார். மாறாக, வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாதென பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருட மாவீரர் தினத்தன்று பொதுச்சுடர் ஏற்றுபவர் தொடர்பில் பின்னர் கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg