Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரதட்சணை வாங்காதீர்கள்: தன் கருத்துக்கு மதிப்பளித்தவரை வாழ்த்திய முதலமைச்சர்!

In இந்தியா
Updated: 06:14 GMT, Oct 30, 2017 | Published: 06:14 GMT, Oct 30, 2017 |
0 Comments
1252
This post was written by : Kemasiya

தனது கருத்துக்கு மதிப்பளித்து, மகனின் திருமணத்தின் போது வரதட்சணை வாங்காத தலைமை ஆசிரியர் ஒருவரை,  கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

பீகாரின் போஜ்புர் மாவட்டத்தை சேர்ந்த,  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ‘ஹரிந்தர்குமார் சிங்கினை’,  இன்று (திங்கள்கிழமை) தனது அலுவலகத்திற்கு அழைத்து,  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிதிஷ்குமார்,  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,  ஹரிந்தர்குமார் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  மாநில அரசின் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணம் ஆகியவற்றுக்கு எதிரான செயற்பாடுகளில் அவர் அக்கறை செலுத்தி வருகின்றார். இவ்வாறானவர்கள் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக நின்று,  சமூகத்தை வழிநடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி,  பீகாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய நிதிஷ்குமார்,  உங்கள் பிள்ளைகளின் திருமணத்தின் போது,  வரதட்சணை வாங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இதை செவிமடுத்து, ஹரிந்தர்குமார் தன் மகனின் திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணையை திருப்பி கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த முதலமைச்சர்,  ஹரிந்தர்குமாரை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து,  பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg