Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க தொடர் பங்களாதேஷிற்கு பலத்த ஏமாற்றம்

In கிாிக்கட்
Updated: 06:02 GMT, Oct 30, 2017 | Published: 06:02 GMT, Oct 30, 2017 |
0 Comments
1421
This post was written by : Risha

தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரை 2-0 என கைப்பற்றி பங்களாதேஷ் அணியை வைட்-வொஷ் செய்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதன்படி இரண்டாவது போட்டியை 83 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடர்களில் விளையாடி, ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg