Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சாதனைக்கு சொந்தக்காரரான தென்னாபிரிக்க வீரர்!

In கிாிக்கட்
Updated: 06:17 GMT, Oct 30, 2017 | Published: 06:17 GMT, Oct 30, 2017 |
0 Comments
2063
This post was written by : Risha

ரி-ருவென்ரி போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் நிலைநாட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியின்போதே இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஒன்பது சிக்சர்கள், ஏழு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 36 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்று இவ் உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் ரிச்சட் லெவி 45 பந்துகளிலும், தென்னாபிரிக்காவின் டு பிளெசிஸ், இந்தியாவின் கே.எல். ராகுல் ஆகியோர் 46 பந்துகளிலும், அவுஸ்ரேலியாவின் ஆரான் பிஞ்ச், மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளிலும் சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg