Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் இடம்பெற்ற இன அழிப்பு மறக்கப்பட்டு விட்டதா?

In இலங்கை
Published: 06:13 GMT, Oct 30, 2017 |
0 Comments
1735
icon_com
This post was written by : Varshini

”முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை போன்று, கடந்த 2007ஆம் ஆண்டு கிழக்கில் வாகரை பிரதேசத்தில் ஒரு இன அழிப்பு இடம்பெற்றது. எனினும், கிழக்கு மக்களின் அவலநிலையை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எவரும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாகரை பிரதேச மக்களுடனான சந்திப்பொன்றில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

தமிழர் உரிமைக்காக நீண்ட காலம் போராடி, 60 ஆயிரம் மாவீரர்களையும் 4 இலட்சம் மக்களையும் இழந்து நிற்கின்றோம். எனினும், இதுவரை எவ்வித தீர்வும் அற்ற நிலையில், ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தத்தளிக்கின்றோம் என சுரேஸ் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இவ்வாறு மறக்கப்பட்டும், மழுங்கடிக்கப்பட்டும், தீர்வு கிடைக்காமலும் இருக்கின்ற நிலையில், சிலர் அரசியல் நோக்கம் கருதி செயற்படுவதாக குறிப்பிட்ட சுரேஸ், எதிர்வரும் தேர்தலில் அவ்வாறானவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg