Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கைவிட வடகொரியாவுக்கு வலியுறுத்து

In உலகம்
Updated: 06:12 GMT, Oct 30, 2017 | Published: 06:12 GMT, Oct 30, 2017 |
0 Comments
1529
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச்சோதனை மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அந்நாடு கைவிட வேண்டும் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன.

வடகொரிய நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஹவாயிலுள்ள அமெரிக்க பசுபிக் கட்டளைத் தலைமையகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அமெரிக்க இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது, ‘வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனை தொடர்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

அதன்போது, வடகொரியாவின் பொறுப்பற்ற நடவடிக்கையான பேராபத்தை விளைவிக்கும் அணுவாயுதத்திறன்களை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுடன், நாடுகளுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணும் நிலைமையைத் தவிர்த்து நடக்க வடகொரியா முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg