Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓமந்தையில் விபத்து: 24 பேர் படுகாயம்

In இலங்கை
Published: 06:31 GMT, Oct 30, 2017 |
0 Comments
1534
This post was written by : Varshini

வவுனியா – ஓமந்தை ஏ9 வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரூந்தும் பவுசரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இவ்விபத்து நேர்ந்துள்ளது.

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேரூந்து, ஓமந்தை – பன்றிக்கெய்த குளம் பகுதியில் பயணித்த போது, எதிர்த் திசையில் முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அனைவரும் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக ஆடைத்தொழிற்சாலை பேரூந்துகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

omanthai accident (2) omanthai accident (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg