Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட-கிழக்கு இணைப்பின் அவசியம் என்ன? வலியுறுத்தும் சிவில் சமூகம்

In இலங்கை
Updated: 07:10 GMT, Oct 30, 2017 | Published: 07:10 GMT, Oct 30, 2017 |
0 Comments
1242
This post was written by : Risha

கிழக்கு மக்களை அரசியல் அநாதைகளாக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாகும் என கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன.

மட்டக்களப்பிலுள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான ‘இணையம்’ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கிழக்கிலுள்ள சிவில் அமைப்புகள் இணைந்து இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம், சிவில் அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது தெரிவிக்கப்பட்டதாவது, “60 வருட காலமாக உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை காணவிரும்பினால் வடகிழக்கு இணைந்த அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதன்படி, புதிய அரசியலமைப்பு தொடர்பான இலங்கை நாடாளுமன்ற விவாதத்தின்போது, கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தவேண்டும்.

கிழக்கின் மீது வலிந்து திணிக்கப்படும் மத ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கும், கிழக்கில் சீரழிந்துள்ள கல்வித்தரத்தினை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கும், அரசியல் அதிகார பலத்துடன் நடத்தப்படும் காணி சூரையாடல்களை தடுப்பதற்கும், கிழக்கு மக்களை அரசியல் அநாதைகளாக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் வடகிழக்கு இணைப்பு அவசியம் என்பதனை சிவில் சமூக அமைப்பு என்ற ரீதியில் இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்.

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

அவை அரசியல்யாப்பு திருத்தக்குழுவின் தலைவராகவுள்ள பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் எதிர்க்கட்சி தலைவர், ஐநா மற்றும் சர்வதேச நாடுகளின் தூதுவராலயங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்படும் தீர்வானது வடகிழக்கு இணைந்ததாகவே அமைய வேண்டும். இது ஏனைய சமூகத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையல்ல. தமிழ் தேசிய மக்கள் வட- கிழக்கு இணையாத தீர்வினை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

வடகிழக்கு இணைப்பு அல்லாத தீர்வினைப்பெறுவதற்கான எந்த ஆணையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கோ வழங்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg