Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு: மஹிந்த அணி ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 10:47 GMT, Oct 30, 2017 | Published: 07:00 GMT, Oct 30, 2017 |
0 Comments
1362
This post was written by : Varshini

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல விடயங்கள் காணப்படுவதாக தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமைக்கு இணங்க தற்போது நடைபெற்று வருவதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை தெரிவுசெய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg