Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைநகரிலிருந்து பயணித்த வாகனம் விபத்து: மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 07:26 GMT, Oct 30, 2017 | Published: 07:26 GMT, Oct 30, 2017 |
0 Comments
1265
This post was written by : Risha

கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் பத்துளு ஓயா பொலிஸ் சோதனை சாவடிக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த விபத்து சம்பவித்திருந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து சீமேந்து ஏற்றிக் கொண்டு சென்ற லொறியுடன், கொழும்பிலிருந்து பயணித்த கப் ரக வாகனமொன்று மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த மூவரும் படுகாயமடைந்ததுடன், வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4626

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg