Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வளைகுடா நெருக்கடிக்குத் தீர்வு காண இணக்கம் – கட்டார் இளவரசர்

In உலகம்
Published: 07:34 GMT, Oct 30, 2017 |
0 Comments
2287
icon_com
This post was written by : Suganthini
quatai

கட்டாருக்கும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் நிலவும் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கில், நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என, கட்டார் இளவரசர் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல் தானி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த ஜுன் மாதம் 5ஆம் திகதி கட்டாருக்கும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அன்று முதல் இந்த நிலைமை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, கட்டாருக்கும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையாக ஏனைய வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சமாதானப்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்’ என்றார்.

கட்டார் பயங்கரவாதத்துக்கு உதவி அளித்ததாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள்  கட்டாருடனான ராஜதந்திர உறவு மற்றும் வர்த்தக உறவை கடந்த ஜுன் 5ஆம் திகதி முறித்துக்கொண்டன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கட்டார் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg