Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் இரட்டை படுகொலை: பிரதான சூத்திரதாரி சிக்கினார்

In இலங்கை
Updated: 08:18 GMT, Oct 30, 2017 | Published: 08:18 GMT, Oct 30, 2017 |
0 Comments
4147
This post was written by : Risha

மட்டக்களப்பு- ஏறாவூர் இரட்டை படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி தீபாவளித்தினத்தன்று ஏறாவூர் – சவுக்கடி கிராமத்தில் குறித்த இரட்டை படுகொலை இடம்பெற்றிருந்த நிலையில், பத்து தினங்களின் பின்னர் சந்தேகநபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் வயது தாயும், அவரது 11 வயது மகனும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான சூத்திரதாரியும் சிக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 80இற்கு அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதுடன் 27 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பில் ஏறாவூர், மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg