Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் ஜோர்ஜின் பெயர்

In
Published: 08:26 GMT, Oct 30, 2017 |
0 Comments
1229
icon_com
This post was written by : Suganthini
geroge

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் தம்பதியரின் 4 வயது மகனான ஜோர்ஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களின் தகவல்களை, இலத்திரனியல் சாதனங்கள் மூலம் பரிமாற்றம் செய்தால், அதை உளவுத்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், தற்போது Telegram முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு Telegram மூலமாக அரபுமொழியில் அனுப்பப்பட்ட தகவலை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் போர் தொடங்கினால், துப்பாக்கிக் குண்டுகளின் இசையைக் கேட்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜின் பெயரையும் குறிப்பிட்டு தகவல் பரிமாறி உள்ளனர்.

எனவே, அவர்களுடைய கொலைப்பட்டியலில் ஜோர்ஜ் இருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள் என்பதுடன், இந்தத் தகவல் தொடர்பில் பிரித்தானிய உளவுத்துறையினருக்கு தெரியவந்துள்ளதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.

இதற்கிடையில், ஜோர்ஜ் கற்றுவரும் பாடசாலைக்கு அருகில் வீடியோ பிடித்த பெண் ஒருவரை அண்மையில் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அப்பாடசாலையிலும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg