Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரநடுகை மாதத்தை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள்- வடமாகாண அமைச்சர்

In இலங்கை
Updated: 09:51 GMT, Oct 30, 2017 | Published: 09:51 GMT, Oct 30, 2017 |
0 Comments
1227
This post was written by : Risha

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக வடமாகாண விவசாய கமநல சேவைகளும், நீர்ப்பாசனம்,மீன்பிடி,நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல்கால்நடை அபிவிருத்தி அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், நவம்பர் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதிவரை வடமாகாண மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில், மன்னார் மாவட்டத்திலுள்ள சிவபுரம் கிராமத்தில் நாளை மறுதினம் மரநடுகை தின அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு பயன்தரு மரங்கள் வழங்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, வடமாகாணத்திலுள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு, அக்கிராமத்திலிருந்து பயனாளிக்கும் 5 பழமரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு நிழல்மரக்கன்றுகளும் விநியோகிக்கப்படவுள்ளன. பொது அமைப்புகளுக்கும் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.

மேலும், மரநடுகை மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg