Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னின் கீழான ஆட்சியை நாம் ஏற்கமாட்டோம் – கதலோனியத் தலைவர்கள்

In
Published: 09:11 GMT, Oct 30, 2017 |
0 Comments
1229
This post was written by : Suganthini
spain

ஸ்பெய்னின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழான ஆட்சியை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என, கதலோனியாவின் முன்னாள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) மற்றும் துணைத் தலைவர் ஓரியல் ஜுன்குவாரஸ் (Oriol Junqueras) ஆகியோரே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தபோது, ‘ஸ்பெய்னின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கதலோனியாவை ஸ்பெய்ன் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், ஸ்பெய்னின் கீழான ஆட்சியை நாம் ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை’ என்றனர்.

‘கதலோனிய மக்களால் மாத்திரமே தங்களை ஆட்சியிலிருந்து நீக்க முடியும்’ எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கதலோனியா சுதந்திரப் பிரகடனம் தொடர்பில் அதன் தலைவர் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கதலோனியாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஸ்பெய்ன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி கதலோனியாவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானம் எடுத்தது.

இதனை அடுத்து, கதலோனியத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்குவதற்கும் ஸ்பெய்ன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், கதலோனியாவில் 150 அமைச்சர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே கதலோனியத் தலைவர்களின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg