Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களுக்கு வீதி மின்சார விளக்குகள் வழங்கிவைப்பு!

In இலங்கை
Updated: 09:19 GMT, Oct 30, 2017 | Published: 09:18 GMT, Oct 30, 2017 |
0 Comments
1501
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்கள் சிலவற்றுக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வீதி மின்சார விளக்குகள் மற்றும் உபரணங்களை வழங்கிவைத்துள்ளன.

இந்நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காக்காச்சி வட்டை கிராம அபிவிருத்திசங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

காட்டு யானைகள் குடிமனைகளுக்குள் ஊடுருவதை தடுக்கும் முகமாக வெல்லாவெளிபிரதேசத்திலுள்ள பலாச்சோலை, காக்காச்சிவட்டை, பாலையடிவட்டை, நெல்லிக்காடு, ஆணைகட்டியவெளி ஆகிய கிராமங்களில் முதற்கட்டமாக குறித்த வீதி மின்சார விளக்குகள் மற்றும் உபரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சியின் மட்டு இiணாப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், வெல்லாவெளி பிரதேச அமைப்பாளர் க. குமாரசிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டு வீதி மின்சார விளக்குகள் உபகரணங்களை கிராம தலைவர்களிடம் வழங்கிவைத்தனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg