Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனிய அரசாங்கத் தலைமையகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு

In
Updated: 09:50 GMT, Oct 30, 2017 | Published: 09:50 GMT, Oct 30, 2017 |
0 Comments
1285
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கதலோனியா கொண்டுவரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கதலோனிய அரசாங்கத் தலைமையகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பெருமளவான வாகனங்களில் இன்று (திங்கட்கிழமை) வந்த பொலிஸார், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதலோனியா சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை அதன் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கதலோனியாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஸ்பெய்ன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி கதலோனியாவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானம் எடுத்தது.

இதனை அடுத்து, கதலோனியத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்குவதற்கும் ஸ்பெய்ன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், கதலோனியாவில் பதற்றமான நிலைமை காணப்படுவதைத் தொடர்ந்து, அங்கு பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg