Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகள் இடம் மாறும் சாத்தியம்

In
Updated: 10:17 GMT, Oct 30, 2017 | Published: 10:17 GMT, Oct 30, 2017 |
0 Comments
1419
This post was written by : Suganthini

பிரித்தானிய எச்.எஸ்.பி.சி. வங்கியின்  வேலைவாய்ப்புகளில், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகள் பிரான்ஸுக்கு நகர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக அவ்வங்கியின் நிதிப் பிரிவுக்கான பணிப்பாளர் இயன் மெக்கேய்   (Iain Mackay)    தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்குப் பின்னர், பிரித்தானியாவிலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியின்  வேலைவாய்ப்புகளில், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸுக்கு நகர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது’ என்றார்.

மேலும், ‘பிரெக்சிற் தொடர்பான மூன்றாம் காலாண்டுக்கான செலவில் 12 மில்லியன் அமெரிக்க டொலரை வங்கியானது பதிவு செய்துள்ளது. 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலரை செலவழிக்க வங்கி எதிர்பார்க்கின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg