Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை அணியில் இருந்து விலகும் அதிரடி வீரர்!

In கிாிக்கட்
Published: 10:36 GMT, Oct 30, 2017 |
0 Comments
4972
This post was written by : Anojkiyan
mum

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, அவ் அணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் எதிரணி வீரர்களை மிரட்டி வரும் பாண்ட்யாவின் மவுசு அதிகரித்துள்ளதாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவரின் இந்த முடிவால் மும்பை அணியில் இருந்து விடுபட்டு அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில், ஏலம் எடுக்கும் அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய மதிப்பில் பத்து இலட்டத்திற்கு வாங்கபட்ட அவர், பின்னர் அதீத திறமையை வெளிப்படுத்தியதன் மூலமும் அவரை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அவ் அணி நிர்வாகம் இருபது இலட்சம் ரூபாய் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg