Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை கோரி ஹர்த்தால்!

In
Updated: 11:21 GMT, Oct 30, 2017 | Published: 10:38 GMT, Oct 30, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Risha
HARTHAL (2)

தனியான உள்ளூராட்சி சபையினை நிறுவித்தருமாறு வலியுறுத்தி, சாய்ந்தமருதுவில் பூரண ஹர்த்தாலுடன் கூடிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமானது, எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டமும் இடம்பெற்றிருந்தது. அதில், அனைத்து பள்ளிவாசல்களின் உலமாக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தங்களது மக்களின் தொகைக்கு ஏற்பவும் வாக்காளர் தொகைக்கு ஏற்பவும் தனியான உள்ளூராட்சி சபையினை பிரித்துத்தர முடியும் அதனை எமது அரசியல் வாதிகள் எவரும் இதுவரை செய்து தரவில்லை. எனவே, இவ்விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை அமைத்துத்தரும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும், தமது கோரிக்கை நிறைவேறும்வரை அரசியல் கட்சிசார்ந்தவர்களை தமது பிரதேசத்திற்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர்.

எமது அரசியல் தலைமைகளால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்தமையே இப்போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. இப்பிரச்சனையானது இன்று நேற்று முளைத்ததல்ல. பல நூற்றாண்டு காலமாக இருந்துவரும் பிரச்சினை. நாங்கள் எங்களது சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையினையே கேட்டு நிற்கின்றோம் அதனை பெற்றுத்தர அரசில் தலமைகள் முன்வரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

HARTHAL (1) IMG_9219

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg