Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிகன் கிராண்ட் பிரீயில் வெர்ஸ் டேபன் வெற்றி: ஆனால் சம்பியன் ஆனார் ஹேமில்டன்!

In விளையாட்டு
Updated: 11:12 GMT, Oct 30, 2017 | Published: 11:12 GMT, Oct 30, 2017 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan

பார்முலா 1 கார் பந்தயத்தின் 18வது சுற்றான மெக்சிகன் கிராண்ட் பிரீ பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ் டேபன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், இத்தொடரில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், வெர்ஸ் டேபன் முதலிடத்தையும், போட்ஸ்வால் டெரி போடஸ் இரண்டாவது இடத்தையும், பின்லாந்து வீரர் கிமிரெய்க்கோன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டுக்கு இருபது சுற்றுகளான அரங்கேறும் பார்முலா 1 கார் பந்தயத்தில், புள்ளிகள் அடிப்படையில் லீவிஸ் ஹேமில்டனே முதலிடத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு கடும் போட்டியாக திகழ்ந்த செபாஸ்டியன் வெட்டல் இப்போட்டியில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டதால் 333 புள்ளிகளை பெற்று லீவிஸ் ஹேமில்டன் சம்பியன் ஆனார்.

வெட்டல் 277 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெரி போடஸ் 262 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இதில் யார் வெற்றி பெற்றாலும் ஹேமில்டனின் முதலிடத்திற்கு தாக்கம் செலுத்தாது. இதனால் அவர் ‘பார்முலா1’ சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

32 வயதான ஹேமில்டன் பார்முலா1 கார் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வெல்வது இது 4வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2014, 2015 ஆண்டுகளில் பட்டம் பெற்று இருந்தார். இந்த சீசனில் ஹேமில்டன் 9 பந்தயங்களில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

win

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg