Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா தமிழ் வித்தியாலயத்தில் தீ: களஞ்சிய அறை சேதம்

In இலங்கை
Updated: 11:20 GMT, Oct 30, 2017 | Published: 11:20 GMT, Oct 30, 2017 |
0 Comments
1226
This post was written by : Risha

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பட்ட தீ வீபத்தில் வித்தியாலயத்தின் ஆவண களஞ்சிய அறை முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தீ விபத்தில், அறையில் களஞ்சியபடுத்தபட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்பன சேதமடைந்துள்ளன.

மின்சார ஒழுக்கினாலேயே இத்தீ விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்த மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடியதுடன், நுவரெலியா கல்வி திணைகளத்துடன் தொடர்புகொண்டு களஞ்சிய அறையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

IMG_4488 04

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg