Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்மொழியின் அங்கீகாரத்தை பெற மத்திய அரசும் பணம் ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்

In இந்தியா
Published: 11:15 GMT, Oct 30, 2017 |
0 Comments
1209
This post was written by : Kemasiya
stalin__N_18060

தமிழக அரசைப் போன்று மத்திய அரசும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு 10 கோடியை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில்,  மத்திய அரசும் மேலும் தேவைப்படும் பணத்தை வழங்க வேண்டும் என,  தனது டுவிட்டர் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஏழு செம்மொழிகளில் ஆறு செம்மொழிகளுக்கு இருக்கையுள்ள நிலையில்,  தமிழுக்கான இருக்கையை பெற்றுக்கொள்ள நாற்பது கோடி தேவைப்படும் நிலையில்,  பத்து கோடியினை தமிழக அரசு வழங்கவுள்ளது.

அதே போன்று நடிகர் விஷால் தனது சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் வழங்கியுள்ளார். இந் நிலையில்,  மத்திய அரசும் தேவையான மிகுதிப்பணத்தை வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg