Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலின் பின்னர் ஸ்பெய்னின் ஒரு பகுதியாக கதலோனியா விளங்கும்

In
Published: 11:09 GMT, Oct 30, 2017 |
0 Comments
1173
This post was written by : Suganthini
cata

கதலோனியாவில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பை அடுத்து, ஸ்பெய்னின் ஒரு பகுதியாக கதலோனியா விளங்கும் என, ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் அல்ஃபோன்ஸோ டஸ்ரிஸ் (Alfonso Dastis) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஸ்பெய்னில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, கதலோனியா தனிநாடாகக் கொள்ளப்படாது என்பதுடன், ஸ்பெய்னின் ஒரு பகுதியாக கதலோனியா விளங்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்’ என்றார்.

அத்துடன், ‘கதலோனியாவில் நடத்தப்படவுள்ள தேர்தலின் மூலம், அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நாங்கள் முற்படுகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg