Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்து வீரர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 11:37 GMT, Oct 30, 2017 | Published: 11:37 GMT, Oct 30, 2017 |
0 Comments
1992
This post was written by : Anojkiyan

தொடர் முழுதும் மிகவும் நெருக்கடி கொடுத்த நியூசிலாந்து வீரர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் பின் நிருபர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “துடுப்பாட்ட வீரர்ளுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. பும்ரா, யுசுவேந்திர சஹால் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. பந்துவீச்சாளர்களை அவர்களின் விருப்பப்படியே பந்துவீச அனுமதித்தேன். பனிதுளி அதிகமாக இருந்ததால் நான் அமைதியாக இருந்தேன். பனியதுளியால் பந்துவீசுவது என்பது மிகவும் சவாலானது.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் வெல்வதும், தொடரை கைப்பற்றுவதும் இலக்காக உள்ளது. அதோடு எனது பங்களிப்பும் நன்றாக இருக்க வேண்டும். இந்திய அணி எப்போதுமே, எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

இந்த தொடரில் நியூசிலாந்து மிகவும் சிறப்பாக விளையாடியது. ஒவ்வொரு போட்டியிலும் கடும் போட்டியை அளித்து சவால் கொடுத்தது. இதனால் நாங்கள் எல்லா போட்டியிலும் சிறப்பாக விளையாடவேண்டிய நிலையை ஏற்படுத்தினர். இந்த தொடர் மிகவும் சவாலாக அமைந்தது. நியூசிலாந்து வீரர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg