Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்!

In இலங்கை
Published: 11:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1727
This post was written by : Varshini
Jaffna-Muslim-860-01

இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் கடந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்கள் தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.

அத்துடன், மானிப்பாய் வீதி ஐந்து சந்திப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் யாழ். மாவட்ட முஸ்லிம்கள் இன்று முன்னெடுத்தனர்.

தாம் வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்த போதும், மீள்குடியேற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென இம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விடயங்களில் அரசாங்கம் மற்றும் வடக்கு மாகாணசபையினர் உடனடியாக தலையிட்டு தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டுமென வலியுறுத்தியதுடன், உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேசத்தை நோக்கி தமது போராட்டத்தை விஸ்தரிக்கப்போவதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg