Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னின் தேசிய ஒற்றுமைக்கு சீனா ஆதரவு

In உலகம்
Published: 11:34 GMT, Oct 30, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Suganthini
china

கதலோனியாவில் நிலவிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (திங்கட்கிழமை) சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரிவினையை எதிர்த்து தேசிய ஒற்றுமையைப் பேணுவதற்காக ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

இது ஸ்பெய்னின் உள்விவகாரமான நடவடிக்கையாக இருந்தபோதிலும், அங்கு தேசிய ஒற்றுமையைப் பேணுவதற்காகவும் இன ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகவும் ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க நாம் முன்வந்துள்ளோம்’ என்றார்.

மேலும், ‘சட்டத்தின் ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சமூக ஒழுங்கை ஸ்பெய்ன் அரசாங்கம் பேணும் என்று நாம் நம்புகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg