Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கள மேலாதிக்கமற்ற கௌரவமான வாழ்வையே கோருகின்றோம்- கஜேந்திரன்

In இலங்கை
Updated: 12:23 GMT, Oct 30, 2017 | Published: 12:22 GMT, Oct 30, 2017 |
0 Comments
1218
This post was written by : Risha
ganje

சிங்கள மேலாதிக்கம் இன்றி, இலங்கை நாட்டுக்குள் கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் சி.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற போராடுபவர்களின் உணர்வுகளை புரிந்தவர்கள் என்ற வகையில், ஸ்பெயினிலிருந்து பிரிந்து செல்வதற்கான கதலோனியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அவர்களை போன்று நாம் தனிநாடு கோரவில்லை. எமக்கு சுயநிர்ணய உரிமை இருக்குமாயின், சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கும் உரிமையையே கோருகின்றோம்.

இந்த நாட்டுக்குள் நாம் அங்கீகரிக்கப்பட்டு சிங்கள மேலாதிக்கம் எங்களை நசுக்காமல், நாம் எமது கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றை பாதுகாத்து கௌரவமாக வாழ்வதற்கான அங்கீகாரத்தையே கேட்கின்றோம் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg