Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல!

In இலங்கை
Published: 15:02 GMT, Oct 30, 2017 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan
150 years Canada

சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல. இது பலவருடங்களாக முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும் என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சாய்ந்தமரு ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“காலத்தை இழுத்தடிக்கும் நிகழ்வுகளே இடம்பெற்றுவருகின்றன. தொடர்ந்தும் ஏமாறுவற்கு நாங்கள் தயாரில்லை. எங்களுக்கு நியாயம்கோரி, சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம். நோன்பு நோற்று இறைவனிடம் பிராத்திக்கப் போகிறோம்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபைக் கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல. இது பலவருடங்களாக முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் நிறைவேற்றித் தருவதாக கூறியிருந்தனர்.

இலங்கையில் பிரதேச செயலகத்தைக் கொண்ட ஒரு பிரதேசத்துக்கு, உள்ளூராட்சிசபை இல்லாமலிப்பது, சாய்ந்தமருதுதான். சிறிய சிறிய ஊர்களுக்கும் பிரதேச சபைகள் இருக்கின்றபோதிலும், இந்த பெரிய ஊருக்கு உள்ளூராட்சிசபை இல்லாதது கவலையானதும் அநீதியானதுமான விடயமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg