Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 17:44 GMT, Oct 30, 2017 | Published: 17:44 GMT, Oct 30, 2017 |
0 Comments
1654
This post was written by : Sivaguru Siva

பிரித்தானியாவின் குளுசெஸ்ரெசெயார் பகுதியில் பிரதான நீர்வினியோக குழாயில்  பெரும்கசிவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பிரித்தானியாவின் பிரதான உளவு மையத்தின் நடவடிக்கையில் இன்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

GCHQ  என்ற குறியீட்டுபெயருக்குரிய  அரச தொடர்பாடல் தலைமையகமான பிரதான உளவு மையத்தில் 5 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இது அமைந்துள்ள இடத்துக்கு அருகே சுமார் ஏழாயிரம் வதிவிடங்களும் 17 பாடசாலைகளும் உள்ளன.

இந்த நிலையில் இன்று இந்தப்பகுதிக்கு வழங்கப்படும் பிரதான நீர்வினியோக குழாயில் கசிவு ஏற்பட்டதால் உளவு மையத்தின் நடவடிக்கைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இந்த நீர்க்கசிவு திருத்தப்பட்டு எப்போது நிலைமை வழமைக்குத்திரும்பும் என்பது தொடர்பாக இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

_98534172_maza

கத்தலோனியா தலைவர்கள் மீது ஸ்பெயின் சட்டமா அதிபர் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.

கடந்த வாரம் கத்தலோனிய நாடாளுமன்றம் ஒருதலைபட்சமாக சுதந்திரபிரகடனத்தை நிறைவேற்றியதை அடுத்து  ஸ்பெயின் அரசாங்கத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மனுவல் மஸா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இனி இந்த விடயம் ஸ்பானியச்சட்டத்தின்படி நீதிபதியால் பரிசீலிக்கப்படும்.

இதற்கிடையே ஸ்பெயினின் இந்த நகர்வால் கத்தலொனியத் தலைவர்கள் கைதாகும் நிலைமை உருவாகியிருப்பதால்  தலைவர் புயிக் து மோன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையமையகம் அமைந்துள்ள பிரெசெல்ஸ் நகருக்கு விரைந்தார்.

FILE PHOTO - Catalan President Puigdemont smiles as he chairs meeting in Barcelona

அவருடன் கூடவே முன்னாள் கத்தலோனிய அதிகாரிகளும் சென்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

eight_col_000_TU5WH

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் முன்னாள் உதவியாளர் போல் மனோபோட் மீது முறைகேடுகள் தொடர்பான 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நாட்டு இரகசியங்களை வெளியே கசிய விட்டமை  பணச்சலவை உட்பட்ட 12 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான குற்றசாட்டே ஆரம்பத்தில் மனோபோட் மீது சுமத்தப்பட்டது.

அதன்பின்னர் மேலதிகமாக குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில் இன்று எப் பி.ஐ யின் விசாரணைகளுக்காகவும் அவர் தோன்றியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg