Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா அணு சோதனை நடத்தினால் கதிரியக்கக்கசிவு ஏற்படுமென எச்சரிக்கை

In உலகம்
Updated: 03:57 GMT, Oct 31, 2017 | Published: 03:57 GMT, Oct 31, 2017 |
0 Comments
1470
This post was written by : Suganthini

வடகொரியா மீண்டும் அணுவாயுதச் சோதனை நடத்த முற்பட்டால், அப்பகுதியில் கதிரியக்கக் கசிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக தென்கொரிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் மீண்டும் அணுவாயுதச் சோதனையை நடத்துவதன் மூலம், அப்பகுதியில் கதிரியக்கக் கசிவு ஏற்படுவது மாத்திரமன்றி, பாரிய மண்சரிவுகளும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி, மிகவும் சக்திவாய்ந்த ஆறாவது அணுவாயுதச் சோதனையை வடகொரியா நடத்தியிருந்ததுடன், இதன்போது, ஹைட்ரஜன் எனும் குண்டை வடகொரியா சோதித்திருந்தது. இதன் மூலம் மண்சரிவுகள் ஏற்பட்டதாகவும் அந்நிலையம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg